இன்றைய (24.06.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது
காலை 11.30 முதல் மாலை 5.00 வரை தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு நடைபெறவுள்ளது.
மாலை 5.00 முதல் 5.30 வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

