352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனடா நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சந்தேகநபரின் பயணப்பொதிகளை சோதனை செய்தபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த சந்தை மதிப்பு 352 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதியிடம் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய தகவல்களை கண்டறியும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

