2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம் 5.1% ஆக சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஒட்டுமொத்தமாக விவசாயப் பொருளாதார நடவடிக்கைகள் 1.1% ஆகவும், கைத்தொழில் பொருளாதார நடவடிக்கைகள் 7.2% ஆகவும் மற்றும் சேவைப் பொருளாதார நடவடிக்கைகள் 3.4% ஆகவும் முறையே சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

