நடிகர் விஜய்யுடன் தற்போது தளபதி 69 படத்தில் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், பாடல் காட்சியுடன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தளபதி 69 படத்திற்கு முன் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இதுதான் விஜய்யுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்த முதல் படம் ஆகும். இரண்டு திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த நடிகை பூஜா ஹெக்டே 12 வருடங்களுக்கு முன்பே விஜய்யை பட விழா ஒன்றில் சந்தித்துள்ளார்.
பூஜா ஹெக்டே முதன் முதலில் ஹீரோயினாக நடித்த படம் முகமூடி. மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது விஜய்யின் அருகில் பூஜா ஹெக்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய்யின் அருகில் இருப்பது நடிகை பூஜா ஹெக்டேவா? ஆள் அடையாளமே தெரியவில்லையே என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.