மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (28.06.2026) வார இறுதி நாள் என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்ததால் எந்த இழப்புகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இப்பாலத்தின் வீதிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.
பெரும் அதிர்ச்சி
பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாவிக்கும் இந்த வீதியினை தினமும் பெருமளவான பொதுமக்கள் பயன்படுத்திவரும் நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் காவு வண்டிகளும் இந்த வீதியினை கூடுதலாக பாவித்துவருவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த பாலம் இடிந்துவீழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

