கொட்டக்கலையில் திம்புள்ள பத்தனை காவல்துறை அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (17-06-2026) இடம்பெற்றுள்ளது.
நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற அதிகாரிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மோதலை அமைதிப்படுத்தச் சென்ற பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இரு குழுக்களாலும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளன
இதையடுத்து குறித்த காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காகத் திம்புள்ள பத்தனை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று அங்கு வந்தபோது அவர்களும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைத் திம்புள்ள பத்தனை காவல்துறை அதிகாரிகள் பெரும் முயற்சிக்குப் பின்னர் கைது செய்துள்ளனர்
போக்குவரத்து நெரிசல்
கடுமையான மோதலில் ஈடுபட்ட மூன்று பேரும், தாக்கப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளும் கொட்டக்கலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டக்கலை நகரில் நடந்த மோதலைத் தொடர்ந்து அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த மோதலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பிற்காகவும் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா காவல் நிலையங்களிலிருந்து கூடுதல் காவல்துறை குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

