‘டித்வா’ புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று நடைபெற்றது.
புயல் நிலைமை காரணமாகப் பெருமளவான மின்சார வேலிகள் சேதமடைந்ததுடன், குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல வனஜீவராசிகள் வலயத்தில் பாதுகாப்பு வேலிகளுக்கு முழுமையான மற்றும் பகுதி சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் பொலன்னறுவை மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதுகாப்பு மின்சார வேலிகள் சேதமடைந்துள்ளன.
பாதுகாப்பு மின்சார வேலி பராமரிப்புப் பணிகளை ஒரு ‘சிரமதானப் பணியாக’ அல்லது கூட்டுப் பொறிமுறையொன்றின் ஊடாக முன்னெடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

