மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில், கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை (27) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (26) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலம், கடந்த வெசாக் பண்டிகை தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டை போன்ற நிலைமைகளைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்

