இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!
தென்கொரியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தீர்வாக இலங்கை மற்றும் வியட்நாமில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்வோம் என்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் ஜிண்டோ மாவட்ட மேயர் பரிந்துரைத்து சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலாச்சார கலை மையத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற நகர மண்டபக் கூட்டத்தின் போது இந்த விடயத்தில் அவர் கூறினார்.

