இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) நாடு முழுவதும் இடம்பெற்று வருகிறது.
வவுனியாவில் காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
இதேவேளை அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வவுனியா தேர்தல் ஆணைக்குழுவினர் சென்று பார்வையிட்டு வருவதுடன் ஐரோப்பிய ஓன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிகப்படுகின்றது.