யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்ட லத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது.
எனவே சிறுவர்கள், முதியவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராயச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாடானது யாழ்ப்பாணத்தில் 120 (ஏ. கியூ. ஐ), கொழும்பு – 142 குருநாகல் – 117, கண்டி – 103, கேகாலை – 106, புத்தளம் – 129, பதுளை – 109 என்று பதிவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்தும் குறைந்தும் வருவதாக சுவிற்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காற்றின் தரம் குறித்த தரவுச்சுட்டியை வெளியிடும் இணையத்தளமும் தரவுகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.