யாழ். பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்காக நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (20) முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையூடாகவே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.