யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் தேடும் பணிகள் நேற்றைய தினம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
உறவினர்களிடம் கையளிப்பு
அத்துடன் கடற்றொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் கடற்றொழிலாளர்களை கண்டு மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் இன்றைய தினம் (07) குறிகட்டுவான் இறங்கு துறைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

