கோகோகுலத்தில் சீதை தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை நடிகை வைஷாலி தனிகா சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று கோகுலத்தில் சீதை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஆஷா கவுடா, நந்த கோபால், வைஷாலி தனிகா, நந்தினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் இத்தொடர் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வைஷாலி தனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் வைஷாலியை ஸ்டண்ட் கலைஞர்கள் கயிறு கட்டி மேலே தூக்க, அந்தரத்தில் தொங்குகிறார். துணிச்சலாக டூப் போடாமல் தான் நடித்த இந்தக் காட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் எழுதியிருக்கும் அவர், சின்னத்திரையோ அல்லது திரைப்படமோ அதில் அர்ப்பணிப்பு முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் கோகுலத்தில் சீதை குழுவினர் இன்றி சாத்தியமில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.