ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா கூட்டணியில் உருவான மிரட்டலான மிதாலஜிக்கல் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘கருப்பு’, வார நாட்களிலும் தனது அசைக்க முடியாத வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. சமூக நாடகம், அதிரடி ஆக்ஷன் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தற்போது 5ஆவது நாளில் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது
5ஆம் நாள் வசூல் விபரங்கள்
திரைப்பட வசூல் விபரங்களை வெளியிடும் ‘சாக்னில்க்’ தளத்தின் ஆரம்பக்கட்ட புள்ளிவிபரங்களின்படி, 5ஆவது நாளான இன்று மட்டும் இத்திரைப்படம் 3,027 காட்சிகள் மூலம் சுமார் 4.02 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இன்றைய இறுதி விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையிலும், இந்தியாவில் மட்டும் இதுவரை இத்திரைப்படம் மொத்தமாக 100.04 கோடி ரூபாயையும், நிகர வசூலாக 86.32 கோடி ரூபாயையும் பெற்றுள்ளது.
உலகளாவிய ரீதியில் ரூ. 142 கோடி
4ஆம் நாள் முடிவில், வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து மட்டும் ‘கருப்பு’ திரைப்படம் 47 கோடி ரூபாயை அள்ளியுள்ளது. இதன் மூலம், உலகளாவிய ரீதியில் இத்திரைப்படத்தின் ஒட்டுமொத்த மொத்த வசூல் 142.3 கோடி ரூபாயைக் கடந்து பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்துள்ளது.
மொழி வாரியான வசூல் விபரம் (5ஆம் நாள்):
• தமிழ்: படத்தின் முதன்மை பலமாக விளங்கும் தமிழ் பதிப்பானது, இன்று 2,132 காட்சிகள் மூலம் 3.28 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதன் திரையரங்கு வருகைப்பதிவு 32 சதவீதமாகக் காணப்படுகிறது.
• தெலுங்கு: தெலுங்கு பதிப்பானது 895 காட்சிகள் மூலம் 74 இலட்சம் ரூபாயை ஈட்டியுள்ளதுடன், 23 சதவீத வருகைப்பதிவைக் கொண்டுள்ளது.
திரையரங்கு வருகைப்பதிவு விபரம்
• தமிழ் பதிப்பு: வார நாட்களிலும் இத்திரைப்படம் நல்லதொரு வருகைப்பதிவைப் பதிவு செய்து வருகிறது. இன்றைய காலைக் காட்சிகள் 25.38 சதவீதத்துடன் சுமாரான தொடக்கத்தைப் பெற்றுள்ளன. மாலை மற்றும் இரவுக்காட்சிகளின் விபரங்கள் இணையும் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• தெலுங்கு பதிப்பு: தெலுங்கு பதிப்பிற்கான காலைக் காட்சிகள் 14.73 சதவீதக் குறைந்தளவு வருகைப்பதிவையே பெற்றுள்ளன. எனினும், நாளின் இறுதியில் இதிலும் மாற்றம் ஏற்படலாம்.
ஆரம்ப நாள் முதல் அதிரடி வசூல்
இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் 15.5 கோடி ரூபாய் நிகர வசூலைப் பெற்று அதிரடித் துவக்கம் தந்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, தமிழ் பதிப்பு மட்டும் முதல் நாளில் 13.1 கோடி ரூபாயை வாரிக்கொடுத்தது (வருகைப்பதிவு 54%).
அதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்களிலும் வசூல் மழை பொழிந்தது:
• 2ஆம் நாள் (சனிக்கிழமை): 6,288 காட்சிகள் மூலம் 24.15 கோடி ரூபாய் (வருகைப்பதிவு 56.8%).
• 3ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை): 6,843 காட்சிகள் மூலம் 28.35 கோடி ரூபாய்.
• 4ஆம் நாள் (திங்கட்கிழமை): வாரத்தின் முதல் நாளிலும் சரிவைத் சந்திக்காமல் நிலையாக நின்று 14.3 கோடி ரூபாயை வசூலித்தது.
கதாநாயகன் சூர்யாவின் ஊக்கிரமான நடிப்பும், ஆர்.ஜே. பாலாஜியின் சுவாரசியமான திரைக்கதையும் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளதால், ‘கருப்பு’ திரைப்படம் இந்த வார இறுதிக்குள்ளாக இன்னும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் எனத் திரைத்துறை வட்டாரங்கள் கணிக்கின்றன

