செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக உள்டக்கங்களால் தற்காலத்தில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய டிஜிட்டல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
அறிகுறிகள்
இது தொடர்பாக இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் விசேட விழிப்புணர்வு அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் இணையத்தில் பரப்பப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அல்லது காணொளிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நிழற்படங்களைக் கொண்டிருந்தன.
தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முன்னேற்றத்தால், குற்றவாளிகள் சிறுவர்களின் சாதாரண புகைப்படங்களை அவர்களின் அறிவோ அல்லது அனுமதியோ இன்றி, மிகத் துல்லியமான ஆபாச அல்லது துஷ்பிரயோகப் படங்களாக மாற்றியமைக்க முடிகிறது.
இது சிறுவர்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் மனநலத்திற்குப் பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், இணையவழி அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கிறது.
சிறுவர்கள் இணைய உள்ளாவதைக் காட்டும் அறிகுறிகள்: ஒரு குழந்தை இணையவழியில் அச்சுறுத்தல் அல்லது தவறான செல்வாக்கிற்கு உள்ளாகியிருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகளைப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமூக குழுக்களில் இணையுங்கள் கணினி அல்லது மொபைல் போனைப் பயன்படுத்தும்போது யாராவது அருகில் வந்தால், உடனே திரையை மூடுதல் அல்லது மறைத்தல்.
சமூக ஊடகக் கணக்குகளின் தனியுரிமக் கட்டுப்பாடுகளைத் திடீரென அதிகரித்தல் அல்லது இரகசியமாகப் புதிய கணக்குகளை உருவாக்குதல்.
திடீர் பதற்றம், மன அழுத்தம், குற்ற உணர்ச்சி அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகி தனித்திருக்கும் போக்கு.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிரும்போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
பொதுக் கணக்குகளுக்குப் பதிலாகத் தனியுரிமை பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
இணையத்தில் உள்ள ஆபத்துகள் மற்றும் தெரியாத நபர்களுடன் பழகுவதால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பிள்ளைகளுடன் தோழமையுடன் திறந்த மனதுடன் பேச வேண்டும்.
பிள்ளைகள் அணுகும் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளைக் கண்காணிப்பதுடன், பெற்றோர் கட்டுப்பாட்டுக் கருவிகளை சாத்தியமான இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
டிஜிட்டல் யுகத்தில் பிள்ளைகளைப் பாதுகாப்பது விழிப்புணர்விலிருந்தே தொடங்குகிறது எனவும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூட்டுப் பொறுப்புடன் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

