GPS தொழிநுட்பம் மூலம் ஐஸ் போதைப்பொருளை விற்று வந்த 25 வயதுப் பெண் மற்றும் அவருடனிருந்த இளைஞர் ஒருவரை, பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் 8 கிராம் மற்றும் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் (WhatsApp)மூலம் தகவல்களை பறிமாற்றி, GPS தொழிநுட்பம் மூலம் போதைப்பொருளை வெவ்வேறு இடங்களில் வைத்திருந்தபோது, அந்தப் பெண்ணும் இளைஞரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துபாயைத் தளமாகக் கொண்ட முக்கிய சூத்திரதாரி இந்த மோசடியை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் வெலிகந்தவைச் சேர்ந்தவர் என்றும், தனது திருமணமான கணவரைப் பிரிந்து, 3 வயது மகளைத் தாயிடம் விட்டுச் சென்று குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர்கள் கடத்தும் ஒவ்வொரு போதைப்பொருள் பொதிகளுக்குமான பணம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

