அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்கின் கால்களில் முத்தமிடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் எலான் மஸ்கின் ஆதரவு இருந்ததே என கூறப்படுகின்றது.
அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலையிடும்படியான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பல்வேறு திட்டங்களில் எலான் மஸ்கின் ஆலோசனைகள் செயல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (HUD) தலைமையகத்தில் இருக்கும் உணவக தொலைக்காட்சியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்கின் கால்களில் முத்தமிடுவது போன்ற வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
மேலும் அந்த வீடியோவில், “உண்மையான ராஜா வாழ்க” என்ற வாசகமும் இருந்தது. இது சைபர் பாதுகாப்பு மீறலால் ஏற்பட்ட சிக்கலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய HUD செய்தித் தொடர்பாளர் கேசி லவெட்,
“இந்த சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்நிலையில் எலான் மாஸ்க் இன் காலை , டிரம்ப் முத்தமிடும் காட்சி தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.