வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் உப்புநீரில் விழக்கெரியும் தீர்தமெடுத்தல் நிகழ்வு இன்று (13) முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.
முல்லைத்தீவு முள்ளியவளை கட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய வீதிகள் ஊடாக தீர்த்தக்குடம் எடுத்துச் செல்லப்பட்டு முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் நீராடப்பட்டது.
உப்புநீரில் விழக்கெரியும் அதிசயம் இடம்பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில், இன்று (13) எடுக்கப்படும் தீர்த்தம் முள்ளியவளை கட்டு விநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு உப்புநீரில் கண்கவர் விளக்கேற்றல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.
19.05.2024 ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளை கட்டு விநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று பின்னர் 20ஆம் திகதி காலை கட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தக்குடம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.