மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் துன்பம் வரக்கூடும். தேவையற்ற கவலைகளிலிருந்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களை சுற்றிலும் நல்ல நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டாரம் தோன்ற இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பக்தியின் பக்கம் மனம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கூடுதல் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பரிவு ஏற்படும். உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைதி அனுகூலமான பலன்களை கொடுக்க இருக்கிறது. எதிலும் நிதானத்தை மட்டும் இழந்து விட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் காரணம் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற சினம் தவிர்ப்பது நல்லது. தம்பதியர் இடையே பொறுமை தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்க முன்னேற்றத்திற்கான பாதைகள் பிறக்கும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சினைகளை பற்றி ஆராய வேண்டாம். உத்தியோகத்தில் வீண் முயற்சி வேண்டாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அனாவசிய வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால் சிக்கனம் மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெருமை ஏற்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏமாறவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு நண்பர்கள் மற்றும் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் வெற்றி காணக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. இதுவரை நடக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனாவசிய விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆடம்பரங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் நிறைவு இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத லாபத்தை காணக்கூடிய வாய்ப்புகளை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சோதனைகள் பல வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தாக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிவுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும். சமுதாயத்தில் உங்களுக்கு உரிய மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி தேவை. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் வேண்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிம்மதி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத ஒப்பந்தங்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலமாக ஆதாயம் காணும் அனுகூல பலன் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த போட்டியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இன்று உங்களுடைய நகைச்சுவை உணர்வு மற்றவர்களை எளிதில் கவரும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.