அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனபட்டி அணியாத வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது
இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,
வாகனங்களின் பின் இருக்கைகளில் ஆசனபட்டி பொருத்துவதற்கான காலக்கெடு எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
வலுப்படுத்தப்படும் நடைமுறை
எனவே எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்குப் பின் இந்த விதிமுறையின் நடைமுறை வலுப்படுத்தப்படும்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

