பிரபல கன்னட நடிகை க்ரிஷி தபந்தாவின் பெங்களூர் வீட்டில் தொழில் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தை சேர்ந்தவர் க்ரிஷி தபந்தா. 2014ம் ஆண்டில் மிஸ் கர்நாடகா அழகிப் பட்டம் வென்ற க்ரிஷி, கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார்.
சம்பவம் நடந்தபோது க்ரிஷி வீட்டில் இல்லை…
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கும் எலிகன்ட்ஸ் அபார்ட்மென்ட்டின் நான்காவது மாடியில் இருக்கும் க்ரிஷி தபந்தாவின் வீட்டில் 45 வயதான வைஷாக் உபத்யாய என்பவர் புதன்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.
எனினும் சம்பவம் நடந்தபோது நடிகை க்ரிஷி வீட்டில் இல்லை. பெங்களூரில் ஆட்டோமொபைல் பிசினஸ் மற்றும் கராஜ் நடத்தி வந்த வைஷாகிற்கு மேகா என்கிற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.
மேகாவுக்கும், வைஷாகிற்கும் பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வாரமாக க்ரிஷி தபந்தாவின் வீட்டில் வைஷாக் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் வைஷாக்கின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனைவி மேகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேகாவின் புகாரின்பேரில் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

