நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களில், அவற்றின் மொத்தக் கொள்ளளவிலிருந்து 63 சதவீதமான நீர் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீரை முறையாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மாவட்ட ரீதியாக பின்வருமாறு:
அம்பாறை – 41%
அனுராதபுரம் – 81%
பதுளை – 74%
மாத்தளை – 49%
காலி – 72%
கண்டி – 93%
குருணாகல் – 86%
மொனராகலை – 76%
பொலன்னறுவை – 71%
புத்தளம் – 93%
திருகோணமலை – 68%
மன்னார் – 76%
இருப்பினும், வரும் நாட்களில் மழைவீழ்ச்சி குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

