காவல் இல்லாத சிறு காணிகளில் தேங்காய் கடத்தல் – புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் சம்பவம்
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் உள்ள காவல் இல்லாத சிறு காணிகளில்,
10.01.2026 அன்று மாலை 4.00 மணியளவில்
மரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து கடத்தும் கள்ளர்கள் தொடர்பான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில்,
ஒரு பகுதியினர் மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்துக் கொண்டிருந்ததாகவும்,
அதே நேரத்தில்,
மற்ற இரண்டு பேர் இருசக்கர வண்டியில் அவற்றை எடுத்துச் சென்று
கடத்தலில் ஈடுபட்டதாகவும்
பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காவல் இல்லாத நிலங்களை குறிவைத்து
இவ்வாறான திருட்டுச் செயல்கள் நடைபெறுவதால்
பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கவனம் செலுத்தி
தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல் இல்லாத சிறு காணிகளில் தேங்காய் கடத்தல் – புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் சம்பவம்
No Comments1 Min Read

