மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை கொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடையில்லாத விஷயங்களை வெற்றி காண்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திடீர் அதிர்ஷ்டத்தை சந்திக்க இருக்கிறீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மன குழப்பம் தீரும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்ததை சாதிக்க கூடிய தைரியம் பிறக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் கட்டிய கோட்டை நிறைவடைய கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மையான அணுகுமுறையால் நற்பலன்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்யம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியிட பயணங்கள் அனுகூல பலன் தரும். புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். வேலையில்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் பெருமிதம் ஏற்படும்.
விருச்சிகம்:
விருசிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய உதவும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வாய்ப்புகள் உண்டு. தடைபட்ட வந்து கொண்டிருந்த சுபகாரிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல தடைகளை தாண்டி துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்த்துவிட்டு நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உசிதமானது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளை தவறாமல் பற்றிக் கொள்வது நல்லது.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற விஷயங்களை மனதில் கொள்ளாமல் உங்கள் லட்சிய பாதையை நோக்கி பயணம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் வருமானம் இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் மீது அதிக ஆர்வம் காணப்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுறுசுறுப்புடன் செயலாற்ற கூடிய உற்சாகம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருக்கும். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் காலதாமதமான பலன்கள் ஏற்படலாம். அவசரப் படாமல் பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும்.