யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது.
மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் திண்டாட்டம்
இதில் நகர பகுதிக்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும்.
இன்றைய தினம் (25) குறித்த பேருந்தானது வளமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு தனியார் பேருந்திற்கு போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் கல்வி பொது தராதரா உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப் பட்டமை, பருத்தித்துறை கொழும்பு, பருத்தித்துறை வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை நேற்றையதினம் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.

