சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய அரசியல்வாதியம் சோவியத் யூனியனின் இறுதித் தலைவரும் ஆகிய மிக்கைல் செர்கேவிச் கொர்பச்சோவ் (Mikhail Sergeyevich Gorbachev) தனது 91 ஆவது வயதில் காலமானார்.
1985 முதல் 1991 வரை சோவியத் யூனியனின் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்தார்.
1988 முதல் 1989 வரை சுப்ரீம் சோவியத் தலைமைப் பீடத்தின் தலைவராகவும், 1989 முதல் 1990 வரை சுப்ரீம் சோவியத்தின் தலைவராகவும் பதவியில் இருந்தார்.
கருத்தியல் ரீதியாக, கொர்பச்சோவ் தொடக்கத்தில் மார்க்சியம் லெனினிசக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், பின்னர் 1990 களின் முற்பகுதியில் சமூக சனநாயகத்தை நோக்கிச் சென்றார்.
இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன எனப்படுகிறது. இவருக்கு 1990 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது