மத்திய கிழக்கு மோதலின் ஒரு சாத்தியமான தீவிர போக்காக, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய குழுக்கள் மீது சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதியின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துமாறு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் பணிக்கப்பட்ட ஈரான் ஆதரவு குழுக்கள் மீதே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த ஈராக்கின் துணை இராணுவ அமைப்பு, மீது அமெரிக்கா மற்றும் சவூதி நடத்திய தாக்குதல்களில் சுமார் 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பகைமை நடவடிக்கைகளில் தற்காலிக அமைதி நிலவிவந்த சூழலில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் திடீர் தாக்குதல் நடத்தும் முயற்சியாக ஏவுகணைகளை வீசியதாக அமெரிக்க படை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஈரானின் இந்தத் தாக்குதலில் ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

