உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த வீரரான லியோனல் மெஸ்ஸி, ஜோர்தானுக்கு எதிரான அர்ஜென்டினாவின் கடைசி குழு போட்டியில் மாற்று வீரராக இருப்பார் என மேலாளர் லியோனல் ஸ்கலோனி உறுதிப்படுத்தியுள்ளார்.
39 வயதான மெஸ்ஸி, தனது முதல் இரண்டு போட்டிகளில் ஐந்து கோல்களை அடித்து கோல்டன் பூட் தரவரிசையில் முன்னிலை வகிக்கிறார்.
இதில் அவுஸ்திரியாவுக்கு எதிராக அடித்த இரட்டை கோல்கள், அவரை உலகக் கோப்பையின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை பெற்றுக்கொடுத்தது.
ஓய்வளிக்கும் முடிவு
ஞாயிற்றுக்கிழமை டல்லாஸில் தொடங்கவிருக்கும் போட்டிக்கு முன்பு பேசிய ஸ்கலோனி, மெஸ்ஸிக்கு ஓய்வளிக்கும் முடிவு காயம் தொடர்பானது அல்ல என்று கூறியுள்ளார்.
மெஸ்ஸி பெரும்பாலும் இரண்டாம் பாதியில் களமிறங்குவார்,” என்று அவர் கூறியுள்ளார்.
ஜோர்தான் ஒரு சிறந்த எதிரணி, மேலும் பந்தை எங்களிடமே வைத்துக்கொண்டு ஆட்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதே எங்கள் நோக்கமாக இருக்கும் எனவும் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.
எதிரணியின் முன்கள வீரர்கள் வேகமானவர்கள், அதையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

