மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று(10.06.2026) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
40 வருட நினைவுவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
குருநகர் ஆலய பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் திகதி குருநகர் பகுதியில் இருந்து ஒரு படகில் 31 கடற்றொழிலாளர்கள் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்ட தீவுக்கு சென்றிருந்தனர்.
இதன்போது அங்கு நின்ற கடற்படையினர் கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டும் வாளால் வெட்டியும் 31 பேர் படுகொலை செய்துள்ளனர்.
உயிரிழந்த 31 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன், 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

