மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இருண்டுடன் விவசாயிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை, நேற்று(25) திங்கட்கிழமை சி.ஜ.டி யினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குடும்பிமலை வயல் பகுதியை சிஜடியினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்
சட்ட நடவடிக்கை
இதன்போது அந்த பகுதியில் ஒழித்து வைத்திருந்த சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிள் இரண்டை மீட்டதுடன் குடும்பிமலை வயல் வட்டானை தலைவர் மற்றும் விவசாயி ஒருவர் உட்பட இருவரை சிஐடியினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் வாழைச்சேனை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவக்கப்படுகிறது.

