இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (03) கொண்டாடப்படுகிறது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளின் சில செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பட்டுள்ளார்