எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 13 ஆயிரத்து 832 மீனவர்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதனபடி கொழும்பில் 2 ஆயிரத்து 956 மீனவர்களுக்கும், கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரத்து 175 மீனவர்களுக்கும் மற்றும் களுத்துறையில் 701 மீனவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை , முதற்கட்ட இழப்பீடுத் தொகை வழங்கப்படாத 1, 200 மீனவர்களின் தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எண்ரும் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.