மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் எல்லாம் நடக்க போவதை பார்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். சுபகாரிய தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திடீர் திருப்பங்களை சந்திக்க போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்கள் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் திறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் புதிய விஷயங்கள் நடக்கும். எதிலும் பொறுமையை இழக்காமல் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். கணவன் மனைவியிடையே பேச்சு வார்த்தையில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவரும் யுக்திகளை கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். அவசர முடிவுகள் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் விட்டு விடும். கணவன் மனைவி இடையே நட்புறவாடுவது நல்லது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். சுப காரியத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை தாமதிப்பது நல்லது. சுயதொழில் லாபம் காணலாம். உத்தியோகத்தில் நிதானம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்கள் இழுபறியிலிருந்து வந்த கடன் பாக்கிகள் வசூல் ஆகும். வெளியிட பயணங்களின் பொழுது வாகனத்தின் மீது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் கூடுதல் ஒத்துழைப்பு தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல பலன்களாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவி இடையே அமைதி தேவை. வார்த்தைகளை தேவையில்லாமல் கொட்டி விட வேண்டாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்க கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே தேவையற்ற வருத்தங்கள் ஏற்படாமல் இருக்க மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிட்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும் இதனால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களை ஊக்குவிக்க பலரும் முன் வருவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சினம் தேவையில்லாத இடத்தில் வரலாம் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முயற்சி திருவினை ஆக்கும் எனவே கொண்ட முயற்சிகள் வெற்றி ஆகும் வரை மனம் தளர விடாமல் முன்னேறிக் கொண்டே இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்க போகிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விருத்திக்கான புதிய யுத்திகள் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வருமானம் பெருகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உயர்வான நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்வழியில் செல்லக்கூடிய அமைப்பாக இருப்பதால் குறுக்கு வழியை கையாள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செலவு வரவை விட அதிகமாக இருக்கும் எனவே சிக்கனமாக இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுக்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஊக்கம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு உரிய செலவுகள் வந்து சேரும் என்பதால் புதிதாக எதையும் திட்டமிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும். நேர்மறையாக சிந்திப்பது அனுகூல பலன் தரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறு சிறு தடைகள் வந்து வெற்றிகளை கொடுக்கும். எதிலும் நிதானத்தை கைவிடாமல் இருப்பது நல்லது. பணியிடங்களில் உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாமல் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.