யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 22 மற்றும் 29 வயதுடைய சகோதரர்கள் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவ புலனாய்வு பிரிவினரும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 3 கிராம் 58 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

