பாதுக்கை வட்டரெக்க – பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில், இரவு வேளையில் வீதியின் குறுக்கே கம்பிகளை இழுத்துக்கட்டி, அந்த வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்களை வீழ்த்தி கொள்ளையடித்த சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை இன்று (18) கிராம மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவ்வாறு வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவரின் கழுத்துப் பகுதி வெட்டப்பட்டு காயமடைந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இச்சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

