கண்டி தென்னகும்புர பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக காவல்துறை பரிசோதகருக்கு லஞ்சம் வழங்க முறபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரிக்கு 500,000 ரூபாய் கையூட்டல் கொடுக்க முயன்ற ஒருவரை காவல் நிலையத்தினுள்ளேயே வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 29 வயதுடையவர் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

