உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் நோர்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி , இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் தங்களது வெற்றிப்பாதையில் அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.
இதன்படி காலிறுதி அறையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இங்கிலாந்து தக்கவைத்துள்ளது. 60 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புக்காக, இங்கிலாந்து அணி புதன்கிழமை அன்று அர்ஜென்டினா அல்லது சுவிட்சர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
மேலதிக நேரத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் அடித்த இரண்டு கோல்களின் உதவியுடன், நோர்வேயின் உலகக்கோப்பை கனவை இங்கிலாந்து கலைத்துள்ளது.
எர்லிங் ஹாலண்டின்
போட்டியின் ஆரம்பத்தில் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் கோல் அடித்து நோர்வேயை முன்னிலை பெற செய்தார். எனினும், முதல் பாதி முடிவதற்கு முன் பெல்லிங்ஹாம் சமநிலைக் கோலைப் பதிவு செய்தார்.
இரண்டாம் பாதியில் நோர்வே அடித்த மற்றொரு கோல் VAR பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர், கூடுதல் நேரத்தில் பெல்லிங்ஹாம் வெற்றிக் கோலைப் பதிவு செய்து இங்கிலாந்தை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.
இதற்கிடையில், நோர்வே அணிக்காக தொடர்ந்து 14 போட்டிகளில் கோல் அடித்திருந்த எர்லிங் ஹாலண்டின் கோல் சாதனையும் இந்தப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது.

