ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முக்கிய வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீர்ப்பு அறிவிக்கப்படும் தினத்தை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட காவல்துறை குழுக்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் அதிகளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, சதித்திட்டம் தீட்டுதல், தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கை
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், இதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ள அலுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

