மகா நடிகை நிகழ்ச்சியில் நடிகை நிவேதிகா மூன்றாம் இடத்தை பிடித்தமைக்கு வவுனியாவில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் திரைப்படம் போராட்டம். ஈழத்துச் சினிமா தயாரிப்பாக IBC Tamil Production நிறுவனத்தின் மூலம் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஈழத்தை களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் பிரம்மாண்ட வரவேற்பு
உதைப்பந்தாட்ட வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் ஐ.பி.சி ஊடக நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் மகன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
கதாநாயகியாக நிவேதிகா ராசையா நடித்துள்ளதுடன், ஈழ சினிமாவின் பிரபல நடிகர், நடிகைகளும் இதில் இணைந்துள்ளனர்.
இந் நிலையில் Zee Tamil மகா நடிகை நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்த நிவேதிகாவே போராட்டம் திரைப்படத்தின் கதா நாயகி ஆவார் .
வவுனியாவைச் சேர்ந்தவர் நிவேதிகா இராசையா. இந் நிலையில் வவுனியா மக்கள் தமது பிரதேசத்தை சேர்ந்த நிவேதிகா இராசையாவுக்கு பிரமாண்டமாக விழாவெடுத்து பெருமைப்படுத்தியுள்ளனர்.

