இணையதளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலிகள் மூலமாக நிகழ்நிலை (Online) உடனடி கடன்களைப் பெறும்போது, அவற்றின் கடன் நிபந்தனைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது
சமூக வலைத்தள விளம்பரங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலிகள் மூலம் வழங்கப்படும் நிகழ்நிலை கடன்களைப் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்களிடம், கடனைத் திரும்பச் செலுத்தும்போது அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்பட்டு அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ள
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
கடன் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கடன்களைப் பெறுவதாலேயே இத்தகைய அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச்செயலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அனைத்து அபாயங்களையும் கடன் வாங்குபவரே முழுமையாக ஏற்க வேண்டும் என்றும், கடன் திரும்பப் பெறப்படும் முறை குறித்தும் அந்த நிறுவனங்களின் நிபந்தனைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
எனவே, நிகழ்நிலை மூலம் கடன் பெற விரும்பும் நபர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிபந்தனைகளை முழுமையாக வாசித்து, சரியான புரிதலுடன் செயல்படுவதன் மூலம் நிதி இழப்புகள் மற்றும் பிற அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள காவல்துறை, இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

