சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுவதுதான் அவர்களுக்கு வேண்டிய முதல் உரிமை. ஆனால் அந்த உரிமையே எங்கள் சிறுவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது
தங்கள் பராயத்தில் தாங்களாக வாழ வேண்டிய எங்கள் சிறுவர்கள், போரின் கொடுமைக்குள்ளும் ஒடுக்குமுறைக்குள்ளும் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து நிற்கின்றனர்.
இலங்கையில் சிறுவர் உரிமைகள்
எங்கள் சிறுவர்கள் தங்கள் பராயத்தில் தாங்களாக வாழ அனுமதியுங்கள். உரிமை பறிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் பறிக்கப்பட்ட எங்கள் சிறுவர்கள், இலங்கையில் ஈழச் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியை இந்த உலகின் முன் எழுப்பி, நீதியை கோரி அதன் முகத்தில் அறைகின்றனர்.
ஏதுமறியாத எங்கள் சிறுவர்களை அழிப்பது ஏன்? அவர்களின் வாழ்வையும் நிலத்தையும் பறிப்பது ஏன்? அவர்களின் தாய் தந்தையரைக் கொன்றும், காணாமல் போகச் செய்தும், சிறையில் அடைத்தும் அவர்களை அனாதைகளாக்கியது ஏன்?
குழந்தைகளையே பழிவாங்கலின் இலக்காக மாற்றும் ஒரு நாட்டில் சிறுவர் உரிமைக்கும் மனித உரிமைக்கும் என்ன இடம் இருக்கிறது?
பாலச்சந்திரன் என்ற சாட்சி
இந்தக் கேள்விகளுக்கு முன்னால் ஒரு குழந்தையின் முகமாக நிற்பவன் பாலச்சந்திரன். பாலச்சந்திரன் ஒரு குழந்தை. அவனுக்கு போரின் அரசியல் தெரியாது.
ஆயுதம் ஏந்தியவனல்ல அவன். வாழ வேண்டிய, விளையாட வேண்டிய, படிக்க வேண்டிய, கனவு காண வேண்டிய சிறுவன் அவன். ஆனாலும் அவனுடைய வாழ்வுரிமையே பறிக்கப்பட்டது.
ஈழச் சிறுவர்கள் மீதான உரிமை மீறல்களின் உச்சமான அடையாளமாக பாலச்சந்திரனின் படுகொலை இன்று வரை நம் முன்னால் நிற்கிறது. ஒரு குழந்தையின் முகத்தில் ஒரு தலைமுறையின் வலி தெரிகிறது. அவனது படுகொலை உலகின் மனச்சாட்சிக்கு முன்வைக்கப்பட்ட ஒரு கேள்வியாகவே உள்ளது.
அதிலும் ஒரு வரலாற்று முரணைப் பாருங்கள். பாலச்சந்திரன் பிறந்த அக்டோபர் 1ஆம் திகதியே உலக குழந்தைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகம் குழந்தைகளின் வாழ்வுரிமையையும் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் பேசும் அதே நாளில், ஒரு ஈழக் குழந்தையின் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட வரலாறு உலகத்தின் முன் நிற்கிறது.
உலகின் பாரபட்சம்
ஒரு குழந்தை எந்த இனத்தைச் சேர்ந்தது என்பதனால் அதன் உயிரின் மதிப்பு மாறுமா? எந்த மொழியைப் பேசுகிறது என்பதனால் அதன் பாதுகாப்பு குறையுமா? அதன் பெற்றோரின் அரசியல் அல்லது இன அடையாளம் அதன் குழந்தைப் பருவத்துக்குத் தண்டனையாக மாற முடியுமா?
குழந்தைகளின் உரிமை உலகளாவியது என்றால், ஈழச் சிறுவர்களின் உரிமையும் அதே அளவு உலகளாவியதல்லவா? தாய் தந்தையரை இழந்த சிறுவர்களுக்கும், காணாமல் போனவர்களின் பிள்ளைகளுக்கும், தங்கள் நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களுக்கும், போரின் காயங்களுடன் வளர்ந்த தலைமுறைக்கும் நீதி எங்கே? அவர்களின்
வடக்கு கிழக்குச் சிறுவர்கள்
போருக்குப் பின்னரும் வடக்கு–கிழக்கின் சிறுவர்களின் அவலம் முடிந்துவிடவில்லை. போதைப்பொருள் பாவனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வலையமைப்புகள் சிறுவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன; பொருளாதார நெருக்கடியால் பல சிறுவர்கள் கல்வியைத் தொடர வேண்டிய வயதில் சிறுவர் தொழிலாளர்களாக மாறுகின்றனர்.
தாய் தந்தையரை இழந்தும், காணாமல் போன குடும்ப உறுப்பினர்களின் வலியுடனும் வளர்கின்ற சிறுவர்கள், குடும்ப அரவணைப்பை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
ஒரு குழந்தைக்கு வீடு என்பது வெறும் சுவர் அல்ல; அது பாதுகாப்பும் பாசமும் அடையாளமும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையும் ஆகும். அந்த வீடு இல்லாமல் போகும்போது, குழந்தையின் குழந்தைப் பருவமும் மெதுவாகக் களவாடப்படுகிறது.
போரின் நேரடி காயங்களிலிருந்து தப்பிய தலைமுறையின் பிள்ளைகள் இன்று வறுமை, போதைப்பொருள், சிறுவர் தொழில், குடும்ப இழப்பு, பாதுகாப்பற்ற வாழ்வு போன்ற புதிய நெருக்கடிகளுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது, வடக்கு கிழக்கில் சிறுவர் உரிமை இன்னும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது.
சிறுவர்களாக வாழ விடுங்கள்
குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய உலகம், குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட ஒரு அரசை இன்னும் மயிலிறகால் வருடிக்கொண்டிருப்பது ஏன்?
குழந்தைகளின் நலன்களுக்கு இந்த உலகில் உண்மையான இடம் இருக்கிறதா என்ற கேள்வியையே இது எழுப்புகிறது. ஒரு குழந்தை குழந்தைதான். அவனது உயிருக்கு இன எல்லை இல்லை. அவனது உரிமைக்கு மொழி வேறுபாடு இல்லை. அவனது கண்ணீருக்க
எனவே எங்கள் சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுங்கள். அவர்களின் குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து பறிக்காதீர்கள். அவர்களின் வாழ்வையும் நிலத்தையும் குடும்பத்தையும் எதிர்காலத்தையும் பறிக்காதீர்கள்.
பாலச்சந்திரன் ஒரு குழந்தையின் பெயர் மட்டுமல்ல, ஈழச் சிறுவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தைப் பருவத்தின் முகம். ஈழச் சிறுவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்குச் சாட்சி.

