திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லோரன்ஸ் போட்டியிடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து ராகவா லோரன்ஸ் தனது X பதிவில் அவர் கூறியதாவது :
முக்கிய அறிவிப்பு
“என்னைப் பற்றிய தேர்தல் போட்டி குறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து தெளிவுபடுத்துமாறு பலரும் தொடர்பு கொண்டுள்ளனர்.
தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளேன். எனது பணிகள் ஜூன் 10ஆம் திகதி நிறைவடையும்.
என் வாழ்க்கையைச் சார்ந்த முக்கிய அறிவிப்பை ஜூன் 11ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளேன்.”
இதன் மூலம் தேர்தல் போட்டி தொடர்பான தகவல்களுக்கு அவர் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.
இருப்பினும், அவர் போட்டியிடுவாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் 11ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

