கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மின்சார விபத்துகள் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வீடுகளில் மின்சாரத்தை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துவதன் காரணமாக கணிசமான அளவில் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக தெரிவித்துள்ளது.
தரமற்ற அல்லது பழுதடைந்த அலங்கார மின்விளக்குகள் மற்றும் மின்சாதனங்களே இதற்கான முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

