யாழ்.மாவட்டத்திலிருந்து இரு வாகனங்களில் வாள்களுடன் சென்ற குழு வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, மூன்று முறிப்பு பகுதி இளைஞன் யாழ்.ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ள நிலையில் , பெண் வீட்டார் சம்மதமின்றி பெண்ணை அழைத்து சென்று பதிவு திருமணமும் செய்துள்ளார்.
இதனையடுத்து யாழில் இருந்து இரு வான்களில் வாள்கள் சகிதம் 10 மேற்பட்ட இளைஞர் குழுவுடன் வவுனியாவுக்கு சென்ற தந்தை , குறித்த இளைஞன் வாடகைக்கு குடியிருந்த வீட்டு உரிமையாளரின் வீடு, இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீடு என்பவற்றுக்குள் புகுந்து அச்சுறுத்தியதுடன் வீட்டு உடமைகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய இளைஞர் குழு கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து கட்டியிருந்ததாகவும், இரு வெள்ளை நிற வான்களில் வந்ததாகவும் பொலிஸாரிடம் பாதிக்கபப்ட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

