ஒன்றாரியோவைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் லொட்டோ 6/49 ஜாக்பாட்டை வென்ற பிறகு, இப்போது மில்லியன் கணக்கான பணக்காரர்களாக உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்த இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் வெற்றியை ஈட்டியுள்ளனர்.
லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளனர்.
யோகராஜ் பொன்னுத்துரை, தவராஜா பொன்னுத்துரை மற்றும் அருள்வதனி உதயகுமார் ஆகிய சகோதர சகோதரிகளே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகையை வென்று உள்ளனர்.
பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டமை பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தவராஜா தெரிவிக்கின்றார்.
உடனடியாக தனது சகோதரிக்கு இது தொடர்பில் அறிவித்த போதிலும் அவர் அதனை நம்பவில்லை என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு தம்மால் செயற்பட முடியவில்லை என அருள்வதனி தெரிவிக்கின்றார்.
சகோதரர் பரிசு பற்றி அறிவித்த போது அழுது அதிர்ச்சியில் கீழே வீழ்ந்து விட்டதாக யோகராஜா தெரிவிக்கின்றார்.
புதிய கார் ஒன்றை கொள்வனவு செய்ய உள்ளதாகவும் பிள்ளைகளுக்கு நிதி வழங்க உள்ளதாகவும், மகனின் கல்விக்கு ஒதுக்க உள்ளதாகவும் அருள்வதனி தெரிவிக்கின்றார்.
வீடு மற்றும் கார் என்பனவற்றை கொள்வனவு செய்ய உள்ளதாகவும் பிள்ளைகளின் கல்விக்காக செலவிட உள்ளதாகவும் தவராஜா மற்றும் யோகராஜா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு பாரிய பரிசுத் தொகை வென்றெடுக்க முடியும் என தாம் நினைத்துப் பார்க்கவில்லை என தவராஜா தெரிவிக்கின்றார்.