மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நடத்தி காட்டி ஜெயிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்புங்கள் அனுகூல பலன் தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது. உடல் நலன் தேறும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் மேலும் வலுவாகும் எனவே சந்தர்ப்ப சூழ்நிலைகள் அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிட்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களுடைய பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை தேவை. சுய தொழில் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில விஷயங்கள் தள்ளிச் செல்ல வாய்ப்புகள் உண்டு எனவே நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிரமமான வேலையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்கள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருக்கும் அமைதி அப்படியே இருக்க அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் வரவுக்கு மீறிய செலவுகள் செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம், விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் யோகம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற அலைச்சலை சந்திக்க நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெருமை ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன நிறைவுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் உருவாக வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் கிட்டும். ஆரோக்கியத்தில் சுகவீனம் ஏற்படலாம் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது துணிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயத்தில் வெற்றி கிட்டும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பனிப்போர் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்த வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைசல் இருந்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற சினம் உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பேராசை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற மன உளைச்சலை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் போடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைய அமைதியை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியம் சுகம் தரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு இதனால் அசதி ஏற்படும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு விரிசல் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களின் தளராத முயற்சி, எதிர்பார்த்த விஷயத்தில் சாதக பலனை கொடுக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அவிழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை பற்றி எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அன்புள்ள பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் உண்டாக வாய்ப்புகள் உண்டு விழிப்புணர்வு தேவை.