மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்பு சுமையாக இருக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். ஆரோக்கியம் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான அமைப்பாக இருப்பதால் நீங்கள் எதையும் தைரியமாக செய்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கண்ணியம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. வருவது வரட்டும் என்கிற மனப்போக்கு நிம்மதி தரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலர வாய்ப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்ய நினைப்பதை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. முன்கோபத்தினால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூறிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும். ஆரோக்கியம் பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எதையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் துணிச்சலாக இருப்பது நல்லது. தேவையற்ற பயத்தை தூக்கி எறிந்து விடுங்கள். கணவன் மனைவி உடைய அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனாவசிய கடன்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எண்ணி அதை எண்ணிய வழி ஈடேற்றுவீர்கள். உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளை தாண்டிய முன்னேற்றம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூலமான பலன் கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் சிறு சிறு இடையூறுகள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத விதமாக சில விஷயங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இருவரும் இணைந்து முடிவுகள் எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாய்ப்புகள் அதிகம் வரும். நட்புகளுக்குள் சிறு சிறு சங்கடங்கள் வந்து போகும். உத்தியோக பூர்வ விஷயத்தில் அனுகூல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கும். சுபயோக முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உறவுகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பண வரவு கிடைக்கும். தேவையற்ற இடங்களுக்கு பயணங்களை தவிர்க்க வேண்டும். அலைச்சல் ஏற்படலாம் எனவே முன் யோசனையுடன் இருப்பது நல்லது.