மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் நடக்குமா? என்று இருந்த ஒரு காரியம் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் தங்களுடைய வியாபாரத்தை மேலும் விருத்தி அடைய செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணிகளில் கூடுதல் அக்கறையுடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய பொறுமை பலரும் சோதிக்க கூடும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி உண்டாக கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுமையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க மௌனம் காப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதிக்க பொறுமை காப்பது அவசியமாகும். பல தடைகளை எதிர்த்து தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறலாம். குடும்பத்தில் குதுகலம் காணப்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் போக்கிக் கொள்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பல விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் இருக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டு. உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல பலன்கள் உண்டு. கணவன் மனைவியிடையே இருக்கும் போட்டி பொறாமைகளை தவிர்ப்பது உத்தமம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகள் மேலோங்கி காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டாகக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் இடையூறுகளை விளைவித்துக் கொண்டிருந்த சிலர் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கூடுதல் பொறுப்புடன் செயலாற்றுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கணவன் மனைவியிடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. திடீர் பயணங்களை சந்திக்கலாம்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்கும் முடிவுகள் பிறக்கும். கணவன் மனைவி இடையே எதிர்பார்த்த அளவிற்கு ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றம் மன நிறைவை கொடுப்பதாக இருக்கும். சில தர்ம சங்கடங்களை சமாளிக்க வேண்டியதாக இன்றைய நாள் அமையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் பணவரவு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அரசு வழி காரியம் அனுகூல பலன் கொடுக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். புதிய நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் இனிமை தேவை. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிப்பதில் கவனம் தேவை.