மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கலகலப்பான ஒரு சூழல் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நட்பு உறவாட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக அமையப் போகிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடைபெறலாம். தொழில் மட்டும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன ரீதியான வீண் விரயங்களை சந்திக்கலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நுண்ணிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கவனமுடன் இருந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே எதிர்பாராத வாக்குவாதங்கள் நிகழலாம் எச்சரிக்கை தேவை. சுய தொழில் புரிபவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்க இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் கவனம் தேவை. அனாவசிய வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பொது காரியங்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை மட்டம் தட்டி பேசாமல் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் பலிதமாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய போக்கில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களை மூக்கை நுழைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்க விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிக பொறுமையை கையாளுவது உத்தமம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுமானவரை தேவையற்ற விஷயங்களை பற்றிய சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த இடியாப்ப சிக்கல் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இறை நாட்டம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமான விவாதங்களை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் மட்டும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து போவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் உங்களிடம் காணப்படும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பயணங்களால் செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த வேகத்தில் நீங்கள் உங்களுடைய வேலையை முடிக்க முடியாமல் போகும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே செலவினங்களை பகிர்ந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன்கோபத்தை தவிர்ப்பதால் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்திப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும் இனிய நாளாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவால்களை எதிர் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உடன் பிறந்தவர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பழைய விஷயங்களை அசை போட்டு பார்க்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கமும் இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்வது நல்லது.